கருக்கலைப்புச் சட்டமூலம் நிராகரிப்பு! – ஆர்ஜன்டீன ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகலப்பு!

ஆர்ஜன்டீனாவில் செனட் சபை வாக்கெடுப்பிற்காக விடப்பட்டிருந்த கருக்கலைப்புச் சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) நிராகரிக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் சட்டமூலமொன்று ஆர்ஜன்டீனா கீழ் சபையிலிருந்து செனட் சபைக்கு வாதப்பிரதிவாங்களுக்காக இன்று விடப்பட்டிருந்தது. குறித்த வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் 38 இற்கு 31 வாக்குகள் சட்டமூலத்திற்கு எதிராக கிடைக்கப்பெற்றமையினைத் தொடர்ந்து மீண்டும் சட்டமூலம் கீழ் சபைக்கு திருப்பியனுப்பப்பட்டுது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சட்டமூலத்திற்கு ஆதரவான மற்றும் எதிரான இரு குழுக்களும் கருத்து முரண்பாடுகளுக்குள்ளாகி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த கலகத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சட்டமூலத்திற்கு எதிரானவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதோடு, ஆதரவானர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சட்டமூலமானது 14 வாரங்களுக்குள் கருக்கலைப்பை மேற்கொள்ளக்கூடிய சட்டபூர்வ அங்கீகாரமாகும்.

தற்போது ஆர்ஜன்டீனாவில் அமுலிலுள்ள கருக்கலைப்புச் சட்டமானது, குழந்தைப் பேற்றின்போது தாய்க்கு உயிராபத்து இருக்குமிடது அல்லது பாலியல் துஷ்பிரயோகத்தின் ஊடாக கர்ப்பமாகினால் கருக்கலைப்பினை மேற்கொள்ளும் சட்ட அங்கீகாரமாகும்.

இதேவேளை, லத்தீன் அமெரிக்காவிலுள்ள துருக்கி, உருகுவே ஆகிய இரு நாடுகளில் மட்டுமே தற்போது திறந்த கருக்கலைப்பிற்கான சட்டம் அமுலிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜன்டீனாவில் வருடமொன்றிற்கு 350,000இற்கு மேற்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெறுவதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !