கமல் ஹாசன் பிறந்த நாள்… சியான் விக்ரம் கொடுத்த சர்பிரைஸ்

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன் பிறந்தநாளுக்கு நடிகர் விக்ரம் வாழ்த்து கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்த கமல் ஹாசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும் ஆதரவற்றோருக்கு உதவி செய்து கொண்டாடலாம் என்றும் அவரது கட்சியின் மூலம் அறிக்கை ஒன்று வெளியிட்டார்.

அதன்படி அவரின் பிறந்தநாளான இன்று ஆங்காங்கே இரத்த தான முகாம், உடல் உறுப்பு தானம் ஒப்புதல் அளிக்கும் முகாம், ஆதரவற்றோருக்கு உதவி செய்வது போன்ற தொண்டுகளை செய்து கமல் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

நடிகர் விக்ரம் கமல் ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து

மேலும் கமல் தயாரிப்பில் விக்ரம், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு கடாரம் கொண்டான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை கமல் நேற்று வெளியிட்டார். இதையடுத்து கடாரம் கொண்டான் படக்குழு தற்போது மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது.

இந்த படப்பிடிப்பு நிகழ்வின்போது, இதில் நடிக்கும் நடிகர் விக்ரம் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கமலுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவில் நடிகர் விக்ரமும் வாழ்த்து கூறியுள்ளார். தற்போது இணையத்தளம் முழுவதும் இது தான் வைரல்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !