கமல் பிறந்தநாள் – தொண்டர்கள் பிரபலங்கள் வாழ்த்து

களத்தூர் கண்ணம்மாவில் கையெடுத்துக் கும்பிட்ட சிறுவனை இன்று இந்திய சினிமா வணங்குகிறது. அவரின் ரசிகர்கள் தொண்டர்களாக மாறி பொதுசேவைக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .வர்களுக்கு கட்டளையிட காத்திருக்கும் கமல்ஹாசன் தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாதவர். குழந்தை நட்சத்திரம், நடனக் கலைஞர், உதவி இயக்குநர் என வளர்ந்து நடிகராக தனனை நிலைநிறுத்தி பிறகு இயக்குநராகவும் தடம் பதித்தவர்.ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிகம்பேர் பார்க்கும் மிகப்பெரிய நிகழ்ச்சியாகவும் தன்னால் மாற்ற முடியும் என்று சமீபத்தில் நிருபித்தவர். தமிழ் சினிமாவை இந்தியாவுக்கும் இந்திய சினிமாவை உலகுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியவர்

‘நம்மவர் ‘ கமல்ஹாசன்.பரமக்குடிக்காரன் என்று தன்னை பல மேடைகளில் கமல்ஹாசன் சொல்லிக்கொண்டாலும் பிறந்தது இராமநாதபுரத்தில்தான். வளர்ந்ததுதான் பரமக்குடி. மூத்த அண்ணன் சாருஹாசன் 1930ல் பிறந்தார். இரண்டாவது அண்ணன் சந்திரஹாசன் 1936ல் பிறந்தார்.அக்கா நளினி 1946ல் பிறந்தார். வழக்கறிஞர் ஸ்ரீனிவாச ஐயங்காருக்கும் ராஜலக்‌ஷ்மிஅம்மையாருக்கும் 1954 நவம்பர் 7ஆம் தேதி கடைசி மகனாகப் பிறந்தவர் கமல்ஹாசன். இவரது இயற்பெயர் ‘பார்த்தசாரதி’.இவரின் அம்மா இறக்கும்வரை கமலை, பார்த்தசாரதி என்றே அழைப்பாராம். சுதந்திரப்போராட்ட காலத்தில் இவருடைய அப்பாவுடன் சிறைசென்ற இஸ்லாமிய நண்பர், ‘யாக்கோப் ஹாசன்’. அந்த விடுதலை வீரருடைய பெயர்தான்‘கமல் ஹாசன்’ என்று இவரது அப்பாவால் சூட்டப்பட்டது. பரமக்குடி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் தொடக்க கல்வி. பிறகு சென்னை வந்ததும் திருவல்லிக்கேணி இந்து ஹை-ஸ்கூலில் படித்தார்.ஏ.வி.எம் மெய்யப்பச்செட்டியாரின் கண்பட்டு பீம்சிங்இயக்கிய ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என சொல்லித்தந்த நாட்டில் நாம் மன்னர்களாக நடந்து கொள்ள வேண்டும். அதை மக்கள் செய்யத் தவறி விட்டார்கள். மக்களின் பெரும் கடமை ஒரு தலைவனைத் தேடுவதல்ல, நமது வேலையைச் செய்வதற்கு ஒரு ஆளை நியமிப்பது. முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கையைச் சூறையாடுவதும், விஞ்ஞானம் என்ற பெயரில் இயற்கையைப் பன்மடங்கு பெருக்க வைக்கிறேன் எனச் சொல்லும் விளையாட்டுகள் நமது நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும். என் காலும், மனமும் இந்த மண்ணில் பதிவுற்று விட்டது. நீங்கள் வணங்க வேண்டிய புதிய தெய்வத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஆசைப்படுகிறேன். நீங்கள் வைத்திருக்கும், தெய்வங்களின் பட்டியலில் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மழை, ஆறு, குளங்களையும் கும்பிடத் தொடங்குங்கள். அந்த பயபக்தி உங்களுக்கு வந்து விட்டால் அவை காப்பாற்றப்படும். இதை ஒரு பகுத்தறிவாளர் சொல்லுகிறேன் என்றால் எவ்வளவு பதறிப்போயிருப்பேன் என புரிந்து கொள்ளுங்கள். இந்த பிறந்தநாளில் வாழ்த்து பெறுவதை விட பிறக்க போகும் புதிய தமிழகத்திற்கு வாழ்த்து சொல்லவே விரும்புகிறேன் ,இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்ததானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும். என்று கூறிய கமல்ஹாசன் புதிய அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டார் அவரை இந்த பிறந்த நாளில் ரசிகர்கள், மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம் .. வாழ்க வளமுடன்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !