கமலா ஹாரீஸிற்கு கொரோனா தடுப்பூசி!
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
அவருக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
வொஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில் முதல் டோசை போட்டுக் கொண்டார். அதேபோன்று கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார்.
மக்களுக்குத் தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட ஏற்கனவே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...மேலும் படிக்க கொரோனா தடுப்பூசியைச் செலுத்த தயாராகும் இந்தியா – ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்!