“ கனவுநாயகன் கலாம் “ (பிறந்தநாள் நினைவுக்கவி)

அக்கினி ஏவுகணையின் சொந்தக்காரன்
அண்டத்தை ஆராய்ந்த விஞ்ஞானி
அக்கினிச்சிறகினைப் படைத்த படைப்பாளி
இந்தியாவின் அணுவிஞ்ஞானி
இளையோர்களின் கனவு நாயகன்
ஏவுகணையால் நெருப்படா நெருங்கடா என
பகைநாடுகளுக்கு சவால் விட்ட நாயகன் !
தேசத்தின் மீது நேசம் கொண்ட தேசபிதா
மாணவர் குழாமை மதித்த மகான்
இனமத மொழி கடந்து
இந்தியனாகவே வாழ்ந்த துறவி
தன்னம்பிக்கை விதையை விதைத்து
மாணவர் மனதில் நிலைத்து நின்றாரே !
தூக்கத்தில் காண்பதில்லை கனவு
துலங்க வைப்பதே கனவென மெய்ப்பித்து
இளைஞர்களை கனவு காண வைத்து
இளைஞர்களோடு இரண்டறக் கலந்த ஞானி
இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய வேளை
இராமேஸ்வரத்தின் இமயமே சரிந்தது
இந்தியத் தாயும் கண் கலங்கினாளே
கனவு நாயகனும் காவியமானானே
ஐப்பசித் திங்கள் பதினைந்திலே !
கவியாக்கம்…..ரஜனி அன்ரன் (B.A) 15,10,2018
பகிரவும்...