கனடா தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு குழந்தைகள் உயிரிழப்பு

கனடாவின் ஹலிஃபாக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) சம்பவித்திருப்பதாக ஹலிஃபாக்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிரிய அகதி குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியிருப்பதாகவும், உயிரிழந்தவர்கள் 3 மாதம் முதல் 17 வயதுடையவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஹலிஃபாக்ஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !