கனடாவில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் நச்சுதன்மை!

கனடாவில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் களை கொல்லிகள் சிறிதளவு சேர்க்கப்படுவதாக, வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனெஸ்கோ ஆய்வகத்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் படி உணவுகளில் ரவுண்ட் அப் எனப்படும் களை கொல்லி சிறிதளவு சேர்க்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 18 வகையான நிறுவனங்களின் உணவுகளை பரிசோதித்ததில் அதில் 14 வகையான உணவுகளில் இந்த கிருமி நாசினி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உணவுகளில் காணப்படும் குறித்த இரசாயன பொருளின் அளவானது கனடிய சுகாதார விதிகளுக்கமைய பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பரிசோதிக்கப்பட்ட தயாரிப்புகளின் முழு பட்டியலும் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !