Main Menu

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தைக் கடந்தது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 20ஆயிரத்து 132பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், எட்டு ஆயிரத்து 987பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 681பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நான்காயிரத்து 790பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 355பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, இரண்டு ஆயிரத்து 282பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.