Main Menu

கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கனடாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாத்திரம் புதிதாக 405 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றைய தினம் 12 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 669 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் எட்டாயிரத்து 839 பேர் உயிரிழந்துள்ளதுடன், 96 ஆயிரத்து 689 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.