கனடாவில் அதிகூடிய பனிப்பொழிவு பதிவு

கனடாவில் இவ்வருடம் அதிகூடிய பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

பல இடங்களில் உறைபனி காணப்படுவதோடு, வீதிகள், மரங்கள் என சகல பகுதிகளிலும் பனிப்படலம் தேங்கி நிற்கின்றது. சில இடங்களில் பனி 300 சென்ரிமீற்றர் உயரத்திற்கு பனிப்படங்கள் காணப்படுகின்றன. இதனால், தீவிர குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் சில இடங்களில் 350 சென்ரிமீற்றர் அதாவது 11 அடி பனிப்படலம் காணப்படுகிறது.  நேற்று முன்தினம் 167 சென்ரிமீற்றர் உயரத்திற்கு பனிப்படலம் காணப்பட்டது.

கடந்த 1955ஆம் ஆண்டின் பின்னர் கனடாவில் அதிக பனிப்பொழிவு பதிவான நான்காவது சந்தர்ப்பமாக இவ்வருடம் காணப்படுகிறது.

பனி காரணமாக வீதிகள் வலுக்கும் நிலையில் காணப்படுவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்களை அவதானமாக செயற்படுமாறும், சாரதிகள் இச்சந்தர்ப்பங்களில் வாகனங்களை செலுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !