கனடாவில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்
கனடாவில் அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கனேடிய பொலிஸாரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பல்பொருள் அங்காடி, பூங்காக்கள் மற்றும் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளிலேயே இந்த கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், பொலிஸ் தரப்பில் இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
கனேடிய பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.