கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு!

கனடாவின் அட்லான்டிக் பிராந்தியத்தில் தொடர்ந்தும் கடும் குளிருடன் கூடிய அசாதாரண காலநிலை நீடித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அட்லான்டிக் பிராந்தியத்தில் கடும் பனி மூட்டமான காலநிலைக்கு மத்தியில், மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்றும் வீசி வருகின்றது.

இதேவேளை, நியூஃபவுண்ட்லண்ட் பகுதியில் 130 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதுடன் தெளிவற்ற வாநிலை காணப்படுவதால், அவதானமாக வாகனம் செலுத்துமாறு சாரதிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அட்லான்டிக் பிராந்தியத்தில் கடந்த சில தினங்களாக வீசிய புயல்காற்றின் எதிரொலியாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இருளில் மூழ்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !