கணவன் மனைவி துணுக்குகள் – நீங்கள் ரசிப்பதற்காக

மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க … எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!

கணவன்: அதெல்லாம் சும்மாடி … நம்பாத‌…

மனைவி: ஏன் … ஏன் அப்படி சொல்றீங்க?

“கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா … அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு…

*******************

டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்படி விழுந்துச்சு…?               நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.                               டாக்டர்: ஏன் ?                                            நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர்.

****************************

மனைவி: எந்தக் காரணமும் இல்லாமல் குடிக்கமாட்டேனு சொன்னீங்களே இப்போ எதுக்கு குடிச்சீங்க?           கணவன்: அது ஒண்ணுமில்லைடி… தீபாவளி ராக்கெட் வைக்க பையன் பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்…
மனைவி: ”ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே… அவளுக்கு என்ன வயசு இருக்கும்?”

கணவன்: ”கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!”

மனைவி: ”அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?”

கணவன்: ”மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா,எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?

மனைவி: இல்ல ‘பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்’னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே… இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.

*****************************

கணவன்: (போன் ரிஸீவரை பொத்தியபடி) ”அடியே, அம்மா பாத்ரூமில வழுக்கி விழுந்துட்டாங்களாம்…”

 

மனைவி: ”வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது வேண்டியதுதான்!”

 

கணவன்: ”விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!”

 

மனைவி: ”ஐயோ… அவங்க ஓடியாடுறது மேலே எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ… பார்த்துகிட்டு நிக்கறீங்களே… போனைக் குடுங்க!”

*********************

வாணி: என்னடி உன் செல்போனில் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேய் காலிங்ன்னு வந்துச்சு?

 

ராணி: அது என் மாமியார்டி.

 

வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?

 

ராணி: அது என் நாத்தனார்டி

 

வாணி: ஆமா, இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?       ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன்

*************************

போனில்…
”நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்…”
”ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..’

 

குரு: என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக்கிட்டே இருக்குது?

 

கிரி:என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா… படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க.

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !