கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணங்கள் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி

கஜா புயலினால் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணத்தை அதிகரித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கூடியது. இதன்போது பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, எடப்பாடி பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

“கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு 1.50 இலட்சம் இந்திய ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளுக்கே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சேதமடைந்த படகுகளுக்கு 85 ஆயிரம் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தபோது, அத்தொகை படகுகளை சீர்செய்வதற்கு போதுமான தொகையில்லையென விவசாயிகள் கவலை வெளியிட்டிருந்தனர்.

ஆகையால் தற்போது, சேதமடைந்த படகுகளை சீர்செய்வதற்கு நிவாரண தொகையை மேலும் அதிகரித்துள்ளோம்” என எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !