ஓர்லி விமான நிலையத்தில் பெண் பயணி கொண்டுவந்த பாதணியால் பரபரப்பு

நேற்று வியாழக்கிழமை ஓர்லி விமான நிலையத்தின் ஒரு பகுதி மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டது. பயணி ஒருவர் கொண்டுவந்த பாதணி ஒன்றினால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று ஜனவரி 24 ஆம் திகதி, மாலை 4 மணி அளவில் பெண் ஒருவர் Casablanca (மொராக்கோ) நகருக்கு பயணமாக தயாராக இருந்த நிலையில், அவரது பைக்குள் சிறிய அளவில் மின் விளக்குகள் ஒளிருவதாக நபர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர் மண்டபம் A மற்றும் மண்டபம் B ஆகிய இரண்டு பகுதிகளும் துரித கதியில் வெளியேற்றப்பட்டது. குறித்த மர்ம பொதியினை வைத்திருந்த பெண் கைது செய்யபப்ட்டார்.
அதன் பின்னரான விசாரணைகளில் அது ஒரு ஆடம்பர சப்பாத்து எனவும், ஃபெஷன் ஷோ ஒன்றில் கலந்துகொள்ள குறித்த பெண் அதை எடுத்துக்கொண்டு Casablanca நகர் நோக்கி குறித்த பெண் பயணமாக இருந்ததாகவும் அறியமுடிந்தது. கடந்த டிசம்பரில் நபர் ஒருவர் சாள்-து-கோல் விமான நிலையத்தில் போலி துப்பாக்கி ஒன்று எடுத்து வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !