Main Menu

ஓய்வுபெறும் எண்ணத்தில் செரீனா வில்லியம்ஸ்

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தில் இருப்பதாக 40 வயதான செரினா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

அவர் இதுவரையில் விளையாடிய போட்டிகளில், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 23 கிரேணட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

இறுதியாக 2017 ஆம் ஆண்டு கிரேணட் ஸ்லாம் பட்டம் வென்ற அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விம்பிள்டன் தொடரின் பின்னர் ஒரு வருட காலம் போட்டியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடருக்கு பின்னர் தாம் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலகுவது குறித்து ஆராய்வதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares