ஓட்டல் வெயிட்டரை கரம்பிடித்தார் ராணி எலிசெபத்தின் பேத்தி யூஜெனி!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், அவரது இரண்டாம் மகனான இளவரசர் ஆண்ட்ரூ – சாரா தம்பதியரின் மகள் இளவரசி யூஜினி. பிரிட்டன் அரியாசனத்துக்கான முடிவரிசையில் யூஜினி 9-வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஜேக் ப்ரூக்பேங்கை காதலித்து வந்த யூஜினி அரச குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். பட்டயக்கணக்காளர் தம்பதியரின் மகனான ஜேக் ப்ரூக்பேங், தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு ஓட்டல் வெயிட்டராக பணியாற்றியவர். சுவிட்சர்லாந்தில் பனி சறுக்கு விளையாட்டில் பங்கேற்ற போது யூஜினி மற்றும் ஜேக் ப்ரூக்பேங் இருவரும் நண்பர்களாக அறிமுகம் ஆகினர். பின்னர் நாளடைவில் நட்பு காதலாக மாறியது.

அவர்களது திருமணம் லண்டனில் உள்ள வின்ட்சர் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அரச குடும்பத்தினர் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் பாடகர்கள் உள்பட சுமார் 850 பேர் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் வின்ட்சர் தேவாலயத்தை சுற்றி குதிரை வண்டியில் ஊர்வலமாக வந்தனர். அரச தம்பதியரை கண்ட மக்கள் ஆராவாரக் குரல் எழுப்பினர். பிரிட்டன் அரச குடும்பத்தின் திருமணம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மட்டுமே சுமார் ரூ.40 கோடி செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !