ஒஸ்ரிய ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு: 100,000 பயணிகள் பாதிப்பு!

ஒஸ்ரியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் சுமார் 100,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்களின் வேதன உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (திங்கட்கிழமை) குறித்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசிற்கான முக்கிய ரயில்வே மத்திய வழியாக ஒஸ்ரியா திகழ்கின்றது. இந்நிலையில், குறித்த ரயில்வே போராட்டம் ஐரோப்பிய நாட்டு பயணிகளை வெகுவாக பாதித்துள்ளது.

அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமாகவே இது அமைந்துள்ளதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படுமென ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !