ஒஸ்கார் விருதுக்கான பெயர் பட்டியல் வெளியீடு!

உலக திரைப்பட துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருது எதிர்வரும் 22 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் , சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான ஒஸ்கார் பரிந்துரை பட்டியல் நேற்று (செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டது.

இதன்படி திரைப்பட பிரிவில் பிளாக் பாந்தர், கிரீன் புக், ரோமா, எ ஸ்டார் இஸ் பார்ன், தி ஃபேவரிட், பிளாக்கிளான்ஸ்மேன், போஹிமியன் ராப்ஸாடி ஆகிய திரைப்படங்கள்  இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் ‘தி ஃபேவரிட்’ மற்றும் ‘ரோமா ‘ஆகிய திரைப்படங்கள் சுமார் 10 பிரிவுகளில் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மேலும் சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை உள்ளிட்ட பல்வேறு தொழிநுட்பப் பிரிவுகளிலும் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !