ஒழுங்கான முறையில் பிரெக்ஸிற் நிகழ வேண்டும்: மேர்கல்

மார்ச் 29 ஆம் திகதிக்கு முன்னர் ஒழுங்கான பிரெக்ஸிற்றை அடைவதற்கு தம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயமாக முன்னெடுப்பதற்கு ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்கல் உறுதியளித்துள்ளார்.

ஆனால் ஒப்புக்கொள்ளப்படும் உடன்படிக்கை நியாயமானதாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் அமைய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கு சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒழுங்கான பிரெக்ஸிற்றை அடைய நாங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதை தாங்கள் ஒப்புக்கொள்வதாக லக்ஸம்பேர்க் பிரதமர் சேவியர் பெட்டலுடன் இணைந்து இன்றைய தினம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் மேர்கல் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !