ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பௌண்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர், ஜப்பானின் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப விரும்பவில்லை என அறிவித்திருந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழுவினர் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
இதனிடையே, அவுஸ்ரேலியாவும் கனடாவும் ஏற்கனவே ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாது என அறிவித்துள்ளன.
இதேவேளை, நான்கு வாரங்களுக்குள் ஒலிம்பிக் போட்டிகள் குறித்து அடுத்த முடிவு எடுக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் குழு நிர்ணயித்துள்ளது. ஆனால் விரைவிலேயே இது குறித்து அடுத்த அறிவிப்பு வெளிவரும் என டிக் பௌண்ட் கூறியுள்ளார்.