ஒரே பெயரில் இரண்டு சந்தேக நபர்கள் – விநோதமான கொலை வழக்கு!

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற முக்கிய கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்புக்காக கொலையாளியின் பெயரிலுள்ள மற்றொரு தவறான நபர், சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டதால் நீதிபதி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சைமன் பிரசர் என்பவரை கொன்றமைக்காக 57 வயதான பீட்டர் பிரவுன் மெல்பனிலுள்ள விக்டோரியா உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், குற்றவாளி பீட்டர் பிரவுனுக்கு பதிலாக, அந்த வழக்கில் சம்பந்தமில்லாத அதே பெயரை கொண்ட மற்றொருவரை சிறைச்சாலை அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர்.

பின்னர் தவறு நடந்தது புரிந்துக்கொள்ளப்பட்டு உண்மையான கொலையாளி நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !