ஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் பிறந்த இருவர்: திருமணம் செய்து கொண்ட ஆச்சரியம்!

பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்த ஆண் மற்றும் பெண் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Taunton நகரில் உள்ள Massachusetts மருத்துவமனையில் கடந்த 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் திகதி Aaron Bairos என்ற ஆணும், Jessica Gomes என்ற பெண்ணும் பிறந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த மாதம் 9ஆம் திகதி தங்களது 27வது வயதில் திருமணம் செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களின் காதல் கதை சுவாரசியமானதாக உள்ளது.

ஒரே மருத்துவமனையில் இருவரும் பிறந்தாலும், Aaron, Taunton நகரில் வளர்ந்தார். Jessicaவோ Raynham நகரில் வளர்ந்தார்.

பின்னர் Jessica, Taunton நகருக்கு குடியேறியுள்ளார். இருவரும் தங்கள் உயர்நிலை பள்ளி நண்பர்கள் மூலம் சந்தித்து நட்பாகியுள்ளனர்.

Aaron மற்றும் Jessica ஓட்டுனர் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக சேரும் போது தங்களின் அடையாள அட்டை மூலம் அவர்கள் ஒரே நாளில் பிறந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்கள், முதல் பார்வையிலேயே தங்களுக்குள் காதல் வந்துவிட்டதாக Jessica மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !