ஒரு மாதத்திற்குள் தீர்வு – உறவுகளிடம் உறுதியளித்தார் டக்ளஸ்
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
காணாமற்போனோரின் உறவினர்களுடன் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் பேசிய அவர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் எனக் கூறினார்.
மேலும் சில அரசியல் தலையீடுகள் போன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினையை தீரா பிரச்சினையாக வைத்திருக்கத் தான் விரும்பவில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
எனவேதான் இதற்கொரு தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையில் குறித்த சந்திப்பை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அழைத்துச் சென்று இதற்குரிய தீர்வினை பெற்றுத்தர முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்