ஒன்றிணைந்த எதிரணிக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்காதது தொடர்பில் சிக்கல்

ஒன்றிணைந்த எதிரணிக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்காமை தொடர்பில் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த ஆரம்பத்தில் 100 நாள் ஆட்சி இடம்பெற்றது. அந்த காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நிமல் சிறிபால டி சில்வாவிற்கு வழங்க முடியுமானால் அதனை கூட்டு எதிர்கட்சிக்கு வழங்க முடியாமல் போனது சிக்கலான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !