ஒன்ராறியோவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்களில் 78 பேர் கைது

தெற்கு ஒன்ராறியோவில் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆறுமாதகால விசாரணைகளின் அடிப்படையில் 78 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையின்போது போதைப் பொருட்கள், துப்பாக்கிகள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத ஆட்கடத்தல், போதைப் பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 129 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்கடத்தல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட 18 பெண்களும் 15 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் அனைவரும் ஆட்கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !