ஐ.நா.வில் ஜனாதிபதி மைத்ரிபால: பாக்.பிரதமருடன் பலனுள்ள பேச்சு என ட்வீட்

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வில் கலந்துகொள்ளுமுகமாக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அபாஸியைச் சந்தித்ததாக அவரது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பிராந்தியம் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும், இரு நாட்டு உறவுகள் பற்றியும் அர்த்தபூர்வ பேச்சுவார்த்தைகள் இச்சந்திப்பின்போது இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அபாஸியை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. இருநாட்டு உறவுகள், பிராந்திய விடயங்கள் குறித்து பலனுள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” என அந்த ட்விட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !