ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதை துரிதப் படுத்துமாறு பிரித்தானியா வலியுறுத்தல்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30:1, 34:1 தீர்மானங்களை எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கி முன்னோக்கி செயற்படுமாறு பிரித்தானியா, இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, காலவரையறைக்கு உட்பட்ட திட்டமிடல் மற்றும் உறுதியான தலைமைத்துவத்தின் கீழ் ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்ற அரசாங்கம் மேலும் முன்னேற்றகரமாக செயற்படலாம்.

இதனை செய்வதன் மூலம் இலங்கை மக்களிடையே நீடித்த நல்லிணக்கத்தையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் ஐ.நா. உடனான தொடர் ஈடுபாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை செயற்படுவதற்கான அண்மைக்கால நடவடிக்கைகள் என்பவற்றை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமைக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், அதன் செயற்பாடுகளுக்கு அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !