ஐ நா கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் நடைமுறைக்கேற்ப இலக்கிய படைப்புக்களை வெளிப்படுத்துவதற்கான குழுவில் பேராசிரியர். சச்சிதானந்தம் தேர்வு
திருக்குறளை உலக நூலாக அங்கீகரிக்கவும், தமிழில் பாதுகாக்கப்பட வேண்டிய உலக உன்னதப் படைப்புக்களான சங்ககால இலக்கியம் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை அரிய மற்றும் தரமான படைப்புக்களை ஐக்கிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் நடைமுறைக்கேற்ப வெளிப்படுத்துவதற்காகக் குழு ஒன்றினை தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நிறுவியுள்ளது.
இந்தக் குழுவில் ஈழத்தை சேர்நத ஒருவரும் இயக்குனராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய முனைவர், பேராசிரியர் ச. சச்சிதானந்தம் அவர்கள் ஆவார்
பெரு மதிப்பிற்குரிய முனைவர், சச்சி தமிழர் பாடசாலை இயக்குனர் பேராசிரியர் சச்சிதானந்தம் (M.A, D.S,Ph.D) அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் வாழ்த்துவதில் பேருவகை அடைகிறது. மென்மேலும் அவரது தமிழ்ப்பணி சிறக்க வேண்டுமென இறை ஆசிகளை வேண்டி வாழ்த்துகிறோம்!
பகிரவும்...