Main Menu

ஐ.நாவின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டினை விட சற்று கூடுதலாக 307 கோடி டொலருக்கான வரவு செலவுத்திட்டத்தில் மியன்மார், சிரியா ஆகிய நாடுகளின் யுத்தக் குற்றங்கள் குறித்த விசாரணைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இந்த நாடுகளின் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு நன்கொடை மூலம் மட்டுமே நிதி திரட்டப்பட்டு வந்தது.

இந்தநிலையில், தற்போது முதல் முறையாக அவற்றுக்கு வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பகிரவும்...