ஐ. நாவின் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் திட்டம்: 170 நாடுகள் இணக்கம்

2030 ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக்  கணிசமாகக் குறைக்க 170 நாடுகள் முன்வந்துள்ளன.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் ஐந்து நாட்கள் நடைபெற்ற ஐக்கிய நாட்டு சபையின் சுற்றுச்சூழல் பேரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒரு முறை பயன்படுத்திய பின்னர் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்கை 2025ஆம் ஆண்டுக்குள் கட்டங்கட்டமாக அகற்ற ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்த்தன.

இந்நிலையில் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் உரிய தீர்வைக் கண்டறிவது சிரமம் என்று பேரவையின் தலைவர் சீம் கீஸ்லர் தெரிவித்தார். இந்த தீர்மானங்கள் பேச்சுவார்த்தையுடன் நின்றுவிடாமல் உறுதியான கடப்பாடுகளை முன்வைக்க வேண்டும் என அவர்  மேலும் தெரிவித்தார் .

இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதோடு  4,700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !