Main Menu

ஐ.தே.க வின் தலை­வ­ராக ரணில் 2024 வரை நீடிப்பது உறுதி: சிரேஷ்ட அமைச்சர்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தவிர வேறு எவர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்டு அவர் தேர்­தலில் வெற்றி பெற்­றாலும் ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பு தொடர்ந்தும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமே இருக்கும் என்றும், அடுத்த ஆறு ஆண்­டு­கா­லத்­துக்கு அவரே கட்­சியின் தலைமைப் பொறுப்பை வகிப்பார் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரி­வித்தார்.

கட்­சியின் யாப்பு கடந்த வருடம் இது­தொ­டர்பில் மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் எதிர்­வரும் 2024ஆம் ஆண்­டு­வரை அடுத்த ஆறு ஆண்­டு­க­ளுக்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே  தலைமைப் பொறுப்பை வகிப்பார் என்றும் கூறினார். 

இது­தொ­டர்பில் அவர் மேலும் கூறு­கையில், 

தற்­போ­தைய அர­சியல் நிலை­வ­ரங்­களை பார்க்­கையில் எந்தக் கட்சி வேட்­பா­ளரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் 50 வீதத்தை எட்­டப்­போ­வ­தில்லை என்ற தோற்­றப்­பாடே நில­வு­கின்­றது. எனினும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்­கான ஆத­ரவு அதி­க­ரித்து வரு­கின்­றது. சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ர­வ­ளிக்கும் பட்­சத்­திலும் ஜே.வி.பியி­னரின் இரண்­டா­வது விருப்பு தேர்வு ஐ.தே.கவாக இருக்கும் பட்­சத்­திலும் சஜித் இல­கு­வாக வெற்றி பெற முடியும். 

கோத்­தா­பய ராஜபக் ஷவை பொறுத்­த­மட்டில்,  அவர் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களை எதிர்­பார்த்­த­வ­ராக தெரி­ய­வில்லை. பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­க­ளையே அவர் எதிர்­பார்த்­துள்ளார். 

இதே­வேளை,  அண்­ண­ள­வாக 16 மில்­லியன் மக்கள் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். இவர்­களுள் 12 மில்­லியன் பேர் பெரும்­பான்மை சிங்­கள மக்கள்.  மேலும் 4மில்­லியன் பேர் தமிழ்ப் பேசும் மக்கள் அத்­துடன் 9 இலட்சம் புதிய வாக்­கா­ளர்­களும் உள்­ளனர். 

இந்த 16மில்­லியன் உத்­தேச வாக்­கு­களில் 12 மில்­லியன் பேர் வாக்­க­ளித்தால் அது 85 வீத வாக்­க­ளிப்­பாக அமையும். அதே­வேளை, 4மில்­லி­ய­னா­க­வுள்ள சிறு­பான்மை மக்கள் வாக்­க­ளிப்பில் ஈடு­பட்டால் அது 65 வீத­மாக அமையும். எவ்­வா­றெ­னினும் 65 இலட்சம் வாக்­கு­களை ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒருவர் பெற்றால் மாத்­தி­ரமே அவர் 50 வீத இலக்கை எட்­ட­மு­டியும். 

அந்­த­வ­கையில் புதிய வாக்­கா­ளர்கள் மற்றும் தீர்­மா­னிக்­காமல் இருக்கும் ஒரு பிரிவு வாக்­காளர் ஆகி­யோரின் வாக்­கு­களும் மிகவும் முக்­கி­ய­மா­னவை.  எவ்­வாறு பார்த்­தாலும் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் வெற்றி தோல்­வியை நிர்­ண­யிப்­பதில் கணி­ச­மான பங்­க­ளிப்பை வழங்கும் என எதிர்­பார்க்­கலாம்.   

அதே­வேளை ஜே.வி.பியி­னரும் கணி­ச­மான வாக்­கு­களை பெறக்­கூடும். அவர்கள் பெரும் வாக்­குகள் இரு பிர­தான கட்சி வாக்­கு­களில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூடும் இதுவே கள யதார்த்­த­மாகும். 

இந்­நிலையில்,  ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சாத­க­மான கள நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஐ.தே.க கூட்டு சிறு­பான்மைக் கட்­சி­களை அர­வ­ணைத்து செல்லும் அதே­வேளை, கோத்­தா­பய ராஜபக் ஷ பெரும்­பான்மை மக்­களின் பௌத்த வாக்­கு­க­ளையும்  சிங்­கள கத்­தோ­லிக்க மக்­களின் வாக்­கு­க­ளையும் எதிர்­பார்த்து காய்­களை நகர்த்­து­கின்றார். அவ்வாறு பார்க்கையில்,  35 இலட்சம் வாக்குகள் மாத்திரமே அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

எனினும்,  கள நிலைமைகளைக் கூறமுடியாது. இது சந்தர்ப்பத்திற்கு ஏற்பவும் புதிய மற்றும் தீர்மானிக்காத வாக்காளர் பிரிவினரின் விருப்புகளையும் பொறுத்து வேறுபடும் என்றார்.