ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

கிரிக்கெட் போட்டிகள் நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சியடைந்து வருவதோடு, புதிய தொழில்நுட்பங்களும் புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டே வருகின்றன.

அந்தவந்த வகையில், இதற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை நடத்த கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதியளித்திருந்தது.

இந்நிலையில், நிகழாண்டு உலகக் கிண்ண தொடர் முடிந்தவுடன், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளை, ஜூலை மாதத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட்; சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

தலைசிறந்த 9 அணிகள் இடம்பெறும் இப்போட்டி, 2 ஆண்டுகளாக 27 தொடர்களாக நடக்கிறது. இதன் மூலம் இருதரப்பு தொடர்களும் முக்கியத்துவம் பெறும். தனிப்பட்ட போட்டிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும். உள்ளூர் மற்றும் அயல்நாடுகளில் நடக்கும் போட்டிகளும் இதில் அடங்கும்.

இதில் குறிப்பாக இந்தியாவும்-பாகிஸ்தானும் இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை. புதிதாக ஆப்கானிஸ்தான், அயர்லாந்து டெஸ்ட் அந்தஸ்து பெற்று இடம்பெறுகின்றன. முதல் போட்டி இந்தியாவுக்கும்- விண்டிஸிற்கும் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் மே30ஆம் திகதி முதல் ஜுலை 14ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

இதில், மொத்தம் இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மூன்று முறை சம்பியனான விண்டிஸ், ஆப்கானிஸ்தான் நாடுகள் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலையில் உள்ளது.

10 நகரங்களில் உள்ள 11 மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன. மொத்தம் 7 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !