ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 200 இற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்!

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் உயரதிகாரி மிச்செல்லா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள மிச்செல்லா, ‘சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கடைசிப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் 200 குடும்பங்களை வெளியேற விடாமல் ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 10 இற்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்கள் ஐஎஸ் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டனர்.

இந்த வாரம் மட்டும் 20 ஆயிரம் பேர் ஐஎஸ் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சில குடும்பங்களை வரவிடமால் ஐஎஸ் தீவிரவாதிகள் தடுத்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இட்லிப் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 24 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், இதன்போது பெண்கள், குழந்தைகள் என 51 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !