ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட சுவிஸ் முன்னாள் வீரருக்கு சிறைத்தண்டனை

சிரியாவில் ஐ.எஸ்.-இற்கு எதிராக போரிட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு சுவிட்சர்லாந்து இராணுவ நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

வெளிநாட்டு இராணுவத்தில் இணைந்து சுவிட்சர்லாந்தின் நடுநிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதன்படி அவருக்கு மூன்று மாத கால இடைநீக்கத்துடன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 500 அமெரிக்க டொலர் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து பிரஜையான இவர், சிரியாவிலிருந்து நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டு சுவிட்சர்லாந்து இராணுவ விதிமுறைக்கமைய தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !