ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் சுஷ்மா சுவராஜ்

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 7 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அவர் இத்தாலி, பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய 4 நாடுகளுக்கு சென்றார்.
முதல் கட்டமாக சுஷ்மா சுவராஜ் இத்தாலி புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் பிரான்சு மற்றும் லக்சம்பர்க் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இத்தாலிக்கு சென்ற சுஷ்மா அந்நாட்டு பிரதமர் ஜியூஸெ பி கான்டை சந்தித்து பேசினார். அதன்பின், பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற சுஷ்மா, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் லக்சம்பர்க் சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்தார்.
21-ம் தேதி பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து, அவர் அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் கலைந்துரையாடினார்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !