ஐரோப்பிய நாடுகளுக்கான குடியேற்ற வாசிகளின் வருகை ஐந்தாண்டுகளில் வீழ்ச்சி!

ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகளில் வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தி ப்ளொக் எல்லைபாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்துள்ளது. குறிப்பாக கடந்த வருடம் சுமார் 150,000 சட்டவிரோத குடியேற்றவாசிகளே ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்துள்ளனர்.

இதில் மத்தியதரைக் கடல் வழியாக இத்தாலிக்குள் நுழையும் பிற நாட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளமையை எடுத்துக்காட்டாக கூற முடியும்

ஒரு பிரபலமான அரசாங்கமானது மீட்பு படகுகளை தனது துறைமுகங்களை அண்ட விடாது தடுத்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

எனினும், நிலைமை ஸ்பெயினைப் பொருத்தவரையில் மாறுபட்டுள்ளது. ஐந்து வருட வரிசையில் இரண்டாவது வருடத்தில் அங்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !