ஐரோப்பிய நாடாளு மன்றத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி உரை

ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய சட்டமன்ற உறுப்பினர்களுடன் விவாதமொன்றில் கலந்துக் கொள்ளும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) வந்தடைந்த பிரான்ஸ் ஜனாதிபதியை, ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் அன்டோனியோ தஜானி வரவேற்றார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இன்று உரையாற்றவுள்ள நிலையில், அதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்த தனது நோக்கம் குறித்து எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிரியாவில் டூமா நகரில் பொதுமக்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா தலைமையில் பிரான்ஸும் பிரித்தானியாவும் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதியின் இவ்விஜயம் அமைந்துள்ளது.

சிரியா மீதான இராணுவ மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், இன்றைய விவாதத்தின்போது சிரியா மீதான பிரான்சின் இராணுவ நடவடிக்கைகள் விவாதத்திற்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !