ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: இரண்டாம் நாள் வாக்குப்பதிவு ஆரம்பம்
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் நாள் வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.
அதன்படி, அயர்லாந்து மற்றும் செக் குடியரசு வாக்காளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்களிக்கவுள்ளனர்.
நான்கு நாட்களாக நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலின் முதல் நாள் வாக்குப்பதிவுகள் நேற்று இடம்பெற்றிருந்தன.
நாளை மறுதினத்துடன் வாக்குப்பதிவுகள் நிறைவடையவுள்ளன. இதனை தொடர்ந்து அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குமான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்தவுடன் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.