ஐரோப்பிய கொடியை அகற்றுங்கள்! ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான என்னுடைய முதல் நடவடிக்கை இதுதான்!’-மரீன்-லூ-பென்

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது, பின்னணியில் தென்படும் ஐரோப்பிய கொடியை அகற்றக்கோரி ஜனாதிபதி வேட்பாளர் மரீன்-லூ-பென் கேட்டுள்ளார். தேர்தலுக்கு நான்கு நாட்கள் மாத்திரம் இருக்கும் நிலையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய முன்னணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மரீன் லூ பென், நேற்றைய தினம் பிரெஞ்சு தொலைக்காட்சியான TF1 சேவைக்கு நேர்காணல் வழங்கச் சென்றிருந்தார். நேர்காணல் இடம்பெறும் இடத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியை அகற்றும் படி கோரியுள்ளார். ‘நான் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர். தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் வேட்பாளர் இல்லை!’ என மிக கோபமாக தெரிவித்ததாக அறிய முடிகிறது.
மரீன்-லூ- பென் இது குறித்து தொலைக்காட்சி நிர்வாகிகளிடம் தெரிவிக்கும் போது, ‘நான் பிரான்சின் ஜனாதிபதியாகத்தான் வர வேண்டுமே தவிர, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சை இல்லாதொழிப்பதற்குரிய அனைத்து ஒப்பந்தங்களையும் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான என்னுடைய முதல் நடவடிக்கை இதுதான்!’ என அவர் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, பின்னணி மாற்றப்பட்டு நேர்காணல் ஆரம்பிக்கப்பட்டமை

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !