ஐரோப்பிய ஒன்றிய குடியேறிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இடம்பெயரும் குடியேறிகளின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நிகர இடம்பெயர்வு 2018 ஆம் ஆண்டின் ஜூன் மாத இறுதியில் 74,000 ஆகவும் அதே சமயம் ஏனைய நாடுகளிலிருந்து நிகர குடியேற்றம் 248,000 ஆகவும் காணப்பட்டதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

செப்டம்பர் 2012 க்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றம் மிகக்குறைந்த அளவில் காணப்படுவது இந்த ஆண்டிலேயே என கூறப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய குடியேற்ற எண்ணிக்கை 65,000 ஆக காணப்பட்டது.

ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே தொழில்வாய்ய்ப்புகளுக்காக பிரித்தானியாவுக்கு அதிகளவில் குடியேறியுள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !