ஐரோப்பிய ஒன்றியம் மீது எரித்திரிய மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
எரித்திரியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டாய பணிக்கமர்த்தல் திட்டத்திற்கு நிதியளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மீது, எரித்திரிய மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் குடியேற்றவாசிகளை தடுக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக முன்னெடுக்கப்பட்டுவரும் சாலை கட்டுமான திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் படையினர் கட்டாய பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக எரித்திரியாவிற்கான மனித உரிமை அறக்கட்டளை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், மனித உரிமை சட்டத்தை மீறும் வகையில் செயற்படும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறித்த அறக்கட்டளை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.