ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரித்தானியா தயாரில்லை: நிக்கோலா ஸ்டேர்ஜன்

இரண்டு மாதங்களுக்கு குறைவான காலப்பகுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு பிரித்தானியா தயாராக இல்லை என, ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டேர்ஜன் எச்சரித்துள்ளார்.

வொஷிங்டனில் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வவொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”பிரெக்ஸிற்றுக்கு இன்னும் 53 நாட்களே காணப்படுகின்றன. இவ்வாறன நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு பிரித்தானியாக தயாராக இல்லை. அது தற்போது தெளிவாகியுள்ளது. எனவே, பிரெக்ஸிற் தினத்தை பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலை பிரித்தானியா கோர வேண்டும்.

ஸ்கொட்லாந்து ஒரு ஐரோப்பிய பாரம்பரியம் வாய்ந்த நாடு. நாம் நம்மை ஐரோப்பிய நாடாகவே காண்கிறேன். பிரெக்ஸிற்றுக்கு இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே காணப்படுகின்ற நிலையில், இதுவரை எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை. எனவே, இவ்வாறான தருணத்தில் பிரெக்ஸிற் பேரழிவுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !