ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில் இலங்கை!

பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

பணமோசடி மற்றும் எதிர்ப்பு பயங்கரவாத நிதி கட்டமைப்பின் மூலோபாய குறைபாடுகளை கொண்ட 23 நாடுகளின் கறுப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைப்புமுறையை பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களிலிருந்து தடுக்கும் வகையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களது குறைபாடுகளை விரைவாக சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !