ஐரோப்பா மீதான கருத்து மாறிவிட்டது – அங்கேலா மெர்க்கல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் விலகலும், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மக்ரோங்கின் வெற்றியும் ஐரோப்பா மீதான தனது கருத்தை மாற்றிவிட்டதாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் அடுத்த இரு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது வாக்காளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பது ஜேர்மனியின் பெரிய வலு என்று கூறிய பிரித்தானியாவின் வெளியேற்றம், பிரான்ஸ் மற்றும் ஹொலந்து தேர்தல்களில் ஐரோப்பிய ஆதரவு கட்சிகளின் வெற்றி ஐரோப்பாவின் மீதான தனது பார்வையை மாற்றிவிட்டது.

ஐரோப்பவின் பல சுதந்திரமான கொள்கைகள், உதாரணமாக பேச்சு சுதந்திரம் போன்றவை உலகின் இதரப் பகுதிகளில் இல்லை என்பதால்தான் இன்றைய ஐரோப்பாவிற்காக போராடுவது மதிப்புடையது.

இதனால்தான் நமது தேர்தல் பதாகைகள் ஐரோப்பா வலுவாக இருந்தால்தான், ஜேர்மனி வலுவாக இருக்கும். எனவே இது நேரடியாக தொடர்புடையது” என கூறினார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என்றே தனியாக ஒரு நிதியமைச்சரை உருவாக்கி எப்போதெல்லாம் உறுப்பு நாடுகளுக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகின்றதோ, அப்போதெல்லாம் அதிலிருந்து தடுத்து யூரோ டொலரை வலுப்படுத்தும் யோசனையும் அவர் முன் வைத்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !