Main Menu

ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் கப்பல் லிபிய கடல் எல்லையில் விபத்து; 45பேர் உயிரிழப்பு

ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற குடியேறிகளின் கப்பல், லிபிய கடல் எல்லையில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட 45பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஸ்வாரா நகரின் கடற்கரையோரத்தில் வைத்து கப்பலின் பொறி இயந்திரம் வெடித்ததினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த கப்பல் விபத்துக்குள்ளானபோது அதில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகவும் விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும் அகதிகள் உயர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இன்னொரு சர்வதேச ஊடகம், 117பேர் காணமால் போயுள்ளதாகவும் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு நடந்த மிகவும் மோசமான கப்பல் விபத்து இதுவென விபரிக்கப்பட்டுள்ளது.

லிபியாவில் இருந்து கடல் கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.

லிபியாவில் ஆட்சியிலிருந்த மும்மார் கடாஃபி 2011ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் முக்கிய நாடாக லிபியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.