ஐரோப்பாவில் தடுப்பூசி வழங்களில் தாமதம் – ஐரோப்பிய ஒன்றியத்தை சாடும் அஸ்ட்ரா ஜெனெகா தலைவர்
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தலைவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தாலியில் இடம்பெற்ற செய்தியாளர் தந்திப்பில் பேசிய அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தலைவர், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க பிரித்தானியாவே முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக குறிப்பிட்டார்.
பிரித்தானியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மூன்று மாதங்களுக்குப் பின்னரே ஐரோப்பிய ஒன்றியம் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தாமதமான முடிவே இதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை வழங்கும் செயற்பாட்டில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் குறித்த மருந்து நிறுவனம் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.