Main Menu

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் வெளியானது!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட உள்ளவர்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 29 பேரின் பெயர்க்ள அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஜோன் அமரதுங்க, ஆசு மாரசிங்க, சமன்ரத்னபிரிய, கருணாசேன கொடிதுவகு, ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி தயா பெல்பொல, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார, சுதான் சந்ரசேகர, அருன பிலிக் பெரேரா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

மேலும், மனோஜ் சமிந்த குரே, அசினி லொகுபண்டார, சமல் செனரத், சட்டத்தரணி அப்துல் சப்தார் மொஹமட் நிஸ்பா, லசந்த குணவர்தன, பேராசிரியர் ஹேவா வடுகே சிறில், என்.எஸ்.வின்சன் பதிராஜ, சுனில்த சில்வா, ஜயராஜ் சந்தசேகர, எஸ்.டி.நெல்சன் ஆரியவன்ச, என்.விஸ்னுநாதன், பேராசிரியர் எம்.ஓ.ஏத சொய்ஷா, பேராசிரியர் எம்.டி.பிரியசாந்த குணவர்தன, மரினா ஆபிதின், கெனட் குணவர்தன, ரோஹித போகல்லாகம, பிரசன்ன பெரேரா, சிறிமசிறி அப்புஹாராசி, எஸ். ஏ. பி. ஹேரத் ஆகியோரது பெயர்கள் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தேசியப் பட்டியலில் உள்ளடங்குகின்ற 29 பேரின் பெயர் விபரங்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares