ஏ.பி மற்றும் ஆர் ஹெச் பாசிட்டிவ் வகை இரத்தம் கொண்டவர்களே கொரோனாவுக்கு அதிகளவு பாதிக்கப் படுவதாக அறிவிப்பு
ஏ.பி மற்றும் ஆர் ஹெச் பாசிட்டிவ் வகை இரத்தம் கொண்டவர்கள் கொரோனா தொற்றுக்கு எளிதில் இலக்காகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் அமைந்துள்ள ஸ்ரீகங்கா மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் மேற்படி தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வுக்காக 2 ஆயிரத்து 586 கொரோனா நோயாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏ,பி மற்றும் ஆர்ஹெச் பாசிட்டிவ் இரத்தம் கொண்டவர்கள் எளிதில் கொரோனாவால் பாதிக்கப்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஓ,ஏபி மற்றும் ஆர்.ஹெச் நெகட்டிவ் இரத்தம் கொண்டவர்களுக்கு பாதிப்பு மிகக் குறைவாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.