ஏ.ஆர்.ரஹ்மானின் ஹொக்கி உலகக் கோப்பைக்கான பாடல்!

2018 ஆம் ஆண்டு ஹொக்கி உலகக் கோப்பைக்கான பாடல்  உடன் இணைந்து ‘ஜெய் ஹின்ட் இந்தியா’ அதிகாரப்பூர்வ இசை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி ஹொக்கி உலகக் கோப்பை புவனேஷ்வரில் ஆரம்பமானது.  இந்தத் தொடருக்கான தீம் பாடலை ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்துள்ளார். இதற்கான பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்த பாடலில் இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப் பாடலுக்கு பொலிவுட் பாடலாசிரியர் குல்சார், ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மேலும் 2108ஆம் ஆண்டுக்கான உலக ஹொக்கி ரசிகர்கள் இந்தியாவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில்,  விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டு பாடியுள்ளார்.  இப்போட்டி இம் மாதம்  15 வரை நடைபெறும். இதில் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !